
posted 18th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மயிலத்தமடுவில் புதிய புத்தர் சிலை
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
மாதவனை மயிலத்தமடு பிரதேசம் பாரம்பரியமாக தமிழ் பால் பண்ணையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக புதிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலையே ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பில் மயிலத்தமடு பண்னைளார்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கவென ஜனாதிபதி உத்தரவு பிரப்பிருத்த நிலையில் மேற்படி சிலை வைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)