மன்னார் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்ற சத்திரசிகிக்சை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்ற சத்திரசிகிக்சை

வசதிக் குறைபாடுகளுக்கு மத்தியில் 'நெஞ்சறை' சத்திர சிகிச்சையை மன்னார் பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தி இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றியுள்ளனர்.

கத்திக் குத்து சம்பவத்தில் இளைஞர் நெஞ்சுக்குழியில் ஆழமான காயத்துக்கு உள்ளானார். இதனால், தொடர் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்த இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

கடந்த 5 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மன்னார் பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு 35 வயது இளைஞர் ஒருவர் வலது பக்க நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சேர்க்கப்பட்டார்.

உடனடியாக அவர் சத்திர சிகிச்சை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வலது பக்க நெஞ்சறையினுள் ஐ. சி. ரியூப் எனப்படும் குழாய் செலுத்தப்பட்டு அவருடைய நெஞ்சுக் குழியினுள் வேகமான தொடர் குருதிப்பெருக்கு இருப்பது அவதானிக்கப்பட்டது.

இந்நிலையில் அவசரமாக செய்ய வேண்டிய சி. ரி. ஸ்கான் வசதி மற்றும் நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி என்பன மன்னார் மன்னார் மருத்துவமனையால் இன்மையால் அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், அவரை வெலிசறை மார்பு நோய் சிகிச்சை மருத்துவமனைக்கு மாற்ற யாழ். போதனா மருத்துவமனை அறிவுறுத்தியது. இந்நிலையில், நோயாளி ஏறக்குறைய 3 லீற்றர் குருதியை இழந்திருந்தார். குருதிப்பெருக்கு மிகவும் வேகமாக இருந்தமையால் அவரை நோயாளர் காவு வண்டியில் பிறிதொரு மருத்துவமனைக்கு மாற்றுவது ஆபத்தானது என்பதால் அவருக்கு மன்னார் மருத்துவமனையிலேயே நெஞ்சறை சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

பொது சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் எம். மதுரகீதன் தலைமையிலான சத்திர சிகிச்சை குழுவும் உணர்விழப்பியல் மற்றும் அதி தீவிர சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜூட் பிரசாந்தன் தலைமையிலான குழுவும் இணைந்து சத்திர சிகிச்சையை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ நிபுணர்களால் சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவினாலும், ஏறக்குறைய மூன்று மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவின் திறமை வாய்ந்த அவசர நிலை பராமரிப்பாலும் இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த சத்திர சிகிச்சைக்கு இரத்தவங்கிப் பிரிவு பெரும் சேவையை வழங்கியிருந்தது. மிகப் பெரிய அளவிலான குருதி மாற்றீடு செய்யப்பட்டே இந்த இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்ற சத்திரசிகிக்சை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)