
posted 4th October 2023
துயர்பகிருங்கள்
துயர்பகிருங்கள்
மன்னாரிலும் பணிப்புறக்கணிப்பு
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சட்டத்துறையிலும் நீதித்துறையிலும் இடம் பெறும் அத்துமீறல்களை நிறுத்த கோரியும் நேற்று (03) மன்னார் சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
அதே நேரம் முல்லைத்தீவில் இடம் பெற்றுவரும் போராட்டத்திலும் கலந்துகொண்டு நீதிபதி சரவணராஜவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் போராட்டத்துக்கு வலு சேர்த்தனர்.
நேற்று (03) செவ்வாய் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் எந்த ஒரு நீதி மன்றத்திலும் ஆஜராகவில்லை. வழக்குகளுக்காக சமூகளித்த பொது மக்களும் பல்வேறு பாதிப்புக்களை எதிர் கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)