மனித மச்சங்கள் மாயமாகுமோ - கண்காணிக்கக் கமறாக்கள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மனித மச்சங்கள் மாயமாகுமோ - கண்காணிக்கக் கமறாக்கள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் சிசிரவி கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, “குறித்த இடத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட செயலகத்திடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இவ்வாறு சிசிரிவி கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனிதப் புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வாராய்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடங்கும்” என்று வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் கடந்த செப்ரெம்பர் 15ஆம் திகதிவரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதுவரை கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்ய ஒரு இடைவெளி தேவை என்று தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா கூறியிருந்தார்.

கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் ஒன்பது நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், பதினேழு எலும்புக் கூடுகள் இங்கு தோண்டி எடுப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் தீர்ப்புகளை வழங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி டி. சரவணராஜா, தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன், நீதிசேவை ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றையும் அவர் வழங்கியுள்ளார்.

மனித மச்சங்கள் மாயமாகுமோ - கண்காணிக்கக் கமறாக்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)