மத்திய அரசின் ஊடாக நியமனம் வழங்க முயற்சி

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மத்திய அரசின் ஊடாக நியமனம் வழங்க முயற்சி

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஊடாக நிரந்தர நியமனம் வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நீண்ட காலமாக தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி புதன்கிழமை (18) ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்தே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவது தொடர்பில் அண்மையில் பிரதமருடன் விசேட கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது அமைச்சரவைப் பத்திரம் ஊடாக நியமனங்கள் வழங்குவதற்கான அனுமதியை பெற்றுத் தருவதாக ஆளுநரிடம் பிரதமர் உறுதியளித்திருந்தார் என்று ஆளுநர் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய அரசின் ஊடாக நியமனம் வழங்க முயற்சி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)