மட்டக்களப்பில் பௌத்தம் ஒடுக்கப்பட்டு வருகின்றது

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மட்டக்களப்பில் பௌத்தம் ஒடுக்கப்பட்டு வருகின்றது

மட்டக்களப்பில் பௌத்த மதம் ஒடுக்கப்படுவது தொடர்பில் கேள்வியெழுப்பிய ஓமல்பே சோபித தேரர், அரசியலமைப்புக்கமைய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதச்சுதந்திரம் குறித்து ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் பௌத்த மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் திபுல பெத்தான பகுதியில் வைக்கப்பட்ட புத்தரின் சிலை காணாமல் போயுள்ளதாகவும் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே, ஓமல்பே சோபித தேரர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

மட்டக்களப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புத்தரின் சிலையை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வேறு ஒரு நாடு அமைக்கப்பட்டுள்ளதா? கிழக்கில் கோவில்களை அமைக்கலாம். ஆலயங்கள் இருக்கலாம். முஸ்லிம் பள்ளிவாசல்கள் இருக்கலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை.

நாடாளாவிய ரீதியில் மக்கள் அனைவரும் சமாதானத்துடன் தங்கள் மதச்சார்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள். இதற்கு யாரும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவ்வாறிருக்க ஏன் கிழக்கில், முக்கியமாக மட்டக்களப்பில் மாத்திரம் இவ்வாறான அசாதாரணமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

சிறிலங்காவின் அரசியலமைப்புக்கமைய மக்களுக்குள்ள மதச்சுதந்திரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவு படுத்தவேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் பிரிவினைகளை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது தொடர்பான முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது-என்றார்.

மட்டக்களப்பில் பௌத்தம் ஒடுக்கப்பட்டு வருகின்றது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)