பூநகரி பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பூநகரி பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பண்பாட்டுப் பேரவையும், பூநகரி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா 03.10.2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

குறித்த பண்பாட்டுப் பெருவிழா பிற்பகல் 2.00 மணிக்கு கிளிநொச்சி முக்கொம்பன் கிராம அலுவலர் பிரிவில் இடம் பெற்றது.

பூநகரி பிரதேச செயலாளரும், பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான த. அகிலன் தலைமையிலான இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நி. லாகினி, கிளிநொச்சி முக்கொம்பன் மகா வித்தியாலய அதிபர் ப. ஜோயல் பியசீலன் மற்றும் கிராம மக்கள், பொலிசார் இராணுவத்தினர், என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பாரப்பரிய கலாச்சார உடையணிந்தும், கும்மி ஆட்டம் காவடி ஆட்டம், கரகாட்டம், கோலாட்டம் என பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதுடன், பண்பாட்டை வெளிப்படுத்தும் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் கலைநகரி விருது வழங்கப்பட்டதும், இளங்கலைஞர் விருதும் வழங்கப்பட்டது.

பூநகரி பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)