புதிய அரசியலமைப்பு மூலமே சிஸ்டம் சேஞ் உருவாக முடியும் - சபா குகதாஸ்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

புதிய அரசியலமைப்பு மூலமே சிஸ்டம் சேஞ் உருவாக முடியும் - சபா குகதாஸ்

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய சட்டங்கள் மூலமாக சிஸ்டம் சேஞ் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

உண்மையில் அரகலய போராட்டத் தரப்பு புதிய அரசியல் அமைப்பின் மூலம் சிஸ்டம் சேஞ் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்றே தங்களது பிரதான கோரிக்கையை முன் வைத்தார்களே தவிர இருக்கின்ற அரசியலமைப்பில் புதிய சட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை விரும்பவில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரகலய போராட்டத் தரப்பிற்கு முன்பாக நீண்டகாலமாக ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையாக இருப்பதே அதிகாரப் பகிர்வுடன் கூடிய சகல மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பே ஆகும் இதனையே அரகல போராட்ட மக்களும் கோரியுள்ளனர்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையுமே இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை பெருந்தீயாக எரிவதற்கும் கோரமான யுத்தம் பாரிய அழிவுகளை ஏற்படுத்துவதற்கும் அதன் அறுவடையாக நாடு மிகப் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திப்பதற்கும் காரணமானது என்ற கசப்பான உண்மையை மக்கள் உணர்ந்தாலும் இதற்கு காரணமான அதிகார தரப்பு ஏற்றுக் கொள்ளதயாராக இல்லை என்பதே அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கருத்து.

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாம் குடியரசு யாப்பு நாட்டிற்கு புற்றுநோய் போன்றது. அதில் உள்ள சட்டமேலாண்மை குறிக்கப்பட்ட நபர்களின் அதிகாரங்களையும் சுகபோகங்களையும் பாதுகாப்பதாகவே உள்ளது. அத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அதிகாரத் தரப்பின் அதிகாரத் துஸ்பிரையோகங்களே மிகப் பெரும் தடையாகவே உள்ளன.

பெயரளவிலான சுயாதீன ஆணைக்குழுக்கள் நியாயத்தை வெளிக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி என்கின்ற தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் பெரும் தடையாக உள்ளதை கடந்தகால சம்பவங்கள் ஆதாரமாக காட்டுகின்றன. இவ்வாறான நிலையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நிலையான அபிவிருத்திக்கும் இனங்களிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த பொருத்தமான வழி சிஸ்டம் சேஞ் ஒன்று தான் இதனை புதிய அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வினைக் கொண்ட அரசியலமைப்பு மூலமே நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து பொருளாதாத்தை மீட்டெடு்க்கமுடியும் இதற்கு ஆட்சியாளர் தயார் இல்லை என்பதே மனுஷவின் அறிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு மூலமே சிஸ்டம் சேஞ் உருவாக முடியும் - சபா குகதாஸ்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)