பலவகைச் செய்தித் துணுக்குகள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
பலவகைச் செய்தித் துணுக்குகள்

அரசுக்கு எதிராக சங்கானையில் போராட்டம்

(எஸ் தில்லைநாதன்)

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நேற்று மாலை சங்கானை பஸ் நிலையத்திற்கு முன்பாக தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் தீவக தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் தீப் பந்தங்களை ஏந்தியவாறு "நெருக்காதே நெருக்காதே பொருளாதாரத்தை நெருக்காதே, குறைத்திடு குறைத்திடு மின்சார கட்டணத்தை குறைத்திடு, அடிக்காதே அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, குறைத்திடு குறைத்திடு பொருட்களின் விலைகளை குறைத்திடு என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் தீவக தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், சமூகமட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வயிற்றுக்குற்றினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் உயிரிழந்தார்!

(எஸ் தில்லைநாதன்)

வயிற்றுக் குற்றினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (29) ஞாயிறு உயிரிழந்துள்ளார்.

தர்மபுரம், கிளிநொச்சியை சேர்ந்த இரண்டரை வயதுக் குழந்தையின் தாயான இந்துஜன் பானுசா (வயது - 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 கடந்த 25ஆம் திகதி இரவு வயிற்றுக் குற்று ஏற்பட்டதை அடுத்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


குறித்த இறப்பு தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். இதையடுத்து பிரதேச பரிசோதனைக்கு பின்னர் சடலவம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்

(எஸ் தில்லைநாதன்)

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கரம் சுண்டல் விற்பனை செய்யும் வண்டில் ஒன்றினை தயாரித்து, அதற்கு மின்சார வேலைகள் செய்துவிட்டு, மின்சாரம் செலுத்தினார். இதன்போது மின்சாரம் அவர் மீது பாய்ந்தது.


இந்நிலையில் அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கிய சிறுமி உயிரிழப்பு

(எஸ் தில்லைநாதன்)

தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (29) ஞாயிறு அதிகாலை உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் தாங்கி வீதி, குருநகரை சேர்ந்த ஜேசுதாஸ் அனோஜினி (வயது - 10) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சென். ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் 5ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் குறித்த சிறுமி வீட்டில் இருந்த போது கடந்த 21ஆம் திகதி காலை 5 மணியளவில் தலையில் விறைப்பு ஏற்பட்டதையடுத்து மயங்கியுள்ளார்.


இதையடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


குறித்த இறப்பு தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். இதையடுத்து பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த்திய பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

அனாதரவான படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா

(எஸ் தில்லைநாதன்)

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை கடற்கரை ஒரத்தில் அனாதரவாக தரித்து நின்ற படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா பொதிகள் இன்று (30) திங்கள் கிழமை அதிகாலை ராணுவம், மற்றும் போலீஸ்சாரும் இணைந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்ய படவில்லை.

வல்வெட்டித்துறை இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே ராணுவத்தினர் போலீஸ்சாருடன் இணைந்து கஞ்சா பொதியை கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிகாரி விசாரணைகளை வல்வெட்டித்துறை போலீசாரும், இராணுவத்தினரும் மேற்கொண்டுவருகின்றனர்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)