
posted 27th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தென் கிழக்கு பல்கலையை பார்வையிட ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் வருகை
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கடந்த இரண்டு தினங்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் பல்கலைகழகத்தை பார்வையிட வருகை தந்துள்ளதாக பதிவாளர் அலுவலகம் அறிவித்துள்ளது
பல்கலைக்கழகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்பட்ட முதல் நாள் 24ஆம் திகதி சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளதுடன், இரண்டாவது நாளான 25ஆம் தேதி ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர்.
அத்துடன் சமாத்துறையில் உள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் உள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தை பார்வையிடுவதற்காக இரு தினங்களிலும் 3581 பேர் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)