
posted 17th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
துப்பரவு செய்யப்பட்ட மணற்சேனை மயானம்
கல்முனை மாநகர சபையின் சேவை விநியோக மேம்பாடு திட்டத்தின் கீழ் மணற்சேனை மயானத்தை துப்பரவு செய்யும் வேலைத் திட்டம் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக துப்பரவு செய்யப்படாமல் பற்றைக்காடாக காணப்பட்ட இம்மயானமானது மாநகர சபை ஊழியர்களினால் மிகவும் அர்ப்பணிப்புடன் துப்பரவு செய்யப்பட்டு, கழிவுகள் யாவும் திண்மக் கழிவகற்றல் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளன.
மாநகர சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களான எம்.அமீர், எம்.எம். நிஸார் மற்றும் மேற்பார்வையாளர்கள் துப்பரவுப் பணிகளை நெறிப்படுத்தியிருந்தனர்.
இதற்கு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வி. சந்திரன் உள்ளிட்ட குழுவினரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியினால் விஷேட கருத்திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள கல்முனை மாநகர சபையின் சேவை விநியோக மேம்பாடு எனும் திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி வாரம் பிரகடனம் செய்யப்பட்டு, நாள்தோறும் ஒவ்வொரு மையவாடியை துப்பரவு செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத் திட்டம் கல்முனை தமிழ் பிரிவு இந்து மயானத்தில் ஆரம்பிக்கப்பட்டு, கல்முனைக்குடியில் நூராணியா மையவாடி, மருதமுனையில் அக்பர் மையவாடி, சாய்ந்தமருதில் தக்வா மையவாடி என்பனவும் சிறந்த முறையில் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)