
posted 23rd October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சந்நிதியான் ஆச்சிரமத்தில் நிகழ்வு
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் வெள்ளி வாராந்த நிகழ்வும், உதவி வழங்கலும்20.10.2023 அன்று இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் இரா. செல்வவடிவேல் ஆசிரியரின் மகாபாரதச் சொற்பொழிவும், நவராத்திரி மகிமை என்ற தொனிப்பொருளில் செல்வி அமுதாஸ் நிலாவினியின் பேச்சும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் உதவிகள் வழங்கப்பட்டன.
47 அயிரத்து 500 ரூபா பெறுமதியான சைக்கிள் மடு, நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்த மாணவிக்கு வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காகச் சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியை வசிப்பிடமாகவுள்ள குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டது. இந்த உதவிகளைச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் வழங்கி வைத்தார். நவராத்திரி நிகழ்வுக்காகப் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரிக்கு 40 ஆயிரம் ரூபா நிதியும் சிறுவர் தின நிகழ்வுக்காக 25 ஆயிரம் ரூபா நிதியும் வங்கியில் வைப்பிலிடப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)