
posted 31st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிழக்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட மிக உயரமான பாலமுருகன் சிலை

தாந்தாமலை 40 வட்டையடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலமுருகன் சிலைக்கு குடமுழுக்கு இடம்பெற்றது.
கிழக்கு இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு செல்லும் வழியில் 40 வட்டை சந்தியில் இந்த பாலமுருகன் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 35 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலமுருகன் சிலை கிழக்கு இலங்கையில் மிக உயரமான சிலைகளில் ஒன்றாக திகழ்கின்றது.
தாந்தாமலை முருகன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்த குருக்கள் தலைமையில் சிலைக்கு குடமுழுக்கு வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
இதன்போது விசேட பூசைகள் நடைபெற்று, முச்சந்தி விநாயகருக்கும் குடமுழுக்கு செய்யப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)