
posted 19th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிழக்கில் மீன்பிடி ஆரம்பம்
கிழக்கிலங்கையில் தற்சமயம் பருவகால கடல் மீன்பிடி ஆரம்பமாகியுள்ளது. மிக நீண்டகாலமாக கிழக்கில் கடல் மீன் பிடிவெகுவாகக் குறைந்து மந்த நிலையிலிருந்து வந்ததால் கடற்றொழிலாளர்கள் வருமானமின்றி முடங்கிக் கிடக்கும் நிலை நீடித்து வந்தது.
எனினும் கடந்த ஒருவாரகாலமாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடல் மீன்பிடி கணிசமாக இடம்பெற்று வருகின்றது. இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓந்தாச்சிமடம் பகுதி கடல் மீன்பிடியாளர்களின் கரைவலைக்கு பாரிய மீன்பிடி கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. கோடி ரூபாய்கள் பெறுமதியான பாரை இன மீன்கள் இவ்வாறு பிடிபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவ்லகள் மூலம் அறிய வருகின்றது. அதேபோல் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை, நிந்தவூர்ப் பகுதிகளில் குறித்த பாரை இன மீன்கள் பிடிபட்டன. இதேவேளை தற்சமயம் ஓரளவேனும் தினமும் சில பகுதிகளில் சிறியரக கடல் மீன்கள் பிடிபட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது முதலான பிரதேசங்களில் ஏற்பட்டுளள்ள உக்கிரகடலரிப்ப காரணமாக கரைவலை மீன்பிடியாளர்கள் பெரும் சிரமங்களை அனுபவித்தும் வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)