
posted 28th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிழக்கில் சிவந்த சுவடுகள் நூல் வெளியீட்டு விழா
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான. இரா. துரைரத்தினம் எழுதிய கிழக்கில் சிவந்த சுவடுகள் என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் 4ம் திகதி (2023.11.04) சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
சிறப்பு அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் கலந்து கொள்கிறார்.வரவேற்புரையை ஊடகவியலாளர் கிருஷிகா லிதுர்சனும் அறிமுக உரையை ஓய்வு நிலை கோட்ட கல்வி பணிப்பாளர் அ. சுகுமாரனும் நயவுரைகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கி. துரைராசசிங்கம். பசீர் சேகு தாவூத் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மட்டு ஊடக அமையம் இணைந்து நடத்தும் இந்நூல் வெளியீட்டு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. நிக்சன் சிறப்புரையாற்றவுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)