
posted 21st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வுபணி முன்னெடுப்பு
கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வுபணி முன்னெடுக்கப்பட்டது. தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி 20.10.2023 இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுமன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. இன அகழ்வு பணியின்போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிசார், சிறப்பு அதிரடிபடையினர் முன்னிலையில் இருந்தனர்.
இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் பொது எந்தவித தடையங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியான பணி எதிர்வரும் 22.10.2023 அன்று 9.00 மணியலவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)