
posted 23rd October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா
கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த வாணி விழா இன்று திங்கட்கிழமை (23) வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாநகர சபையின் நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மண் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி. உதயகுமரன் ஆகியோருடன் பிரிவுத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது பெரிய நீலாவணை சிறிமகா விஷ்ணு தேவஸ்தான பிரதம குரு ஈசான சிவம் பத்ம நிலோஜ சர்மா அவர்கள் சிறப்பு பூசையை நடாத்தி, ஆன்மீக உரையையும் நிகழ்த்தினார்.
அத்துடன் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கே. வரதராஜன் சகலாகலா வல்லி மாலை பாடலைப் பாடினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)