
posted 17th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கடற்பாசியால் மீனவர் பாதிப்பு
திருகோணமலை கடலில் ஒதுங்கும் கடற்பாசியால் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
திருகோணமலை கடற்பகுதியில் தற்போது கடற்பாசி ஒதுங்குவதால் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்களின் வலையில் பொருமளவில் கடற்பாசிகளே சிக்குவதாகவும் இதனால் மீன்பிடியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பாசி நிறைவதால் வலையை இழுக்க முடியாதுள்ளதாகவும், வலையை சுத்தம் செய்வதற்கே அதிக நேரம் செலவாவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்ற திருகோணமலை கடற்கரை, தற்போது பாசிகள் ஒதுங்கி அழகு குன்றி காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)