
posted 9th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
உதைபந்தாட்டப் போட்டியில் மஹாஜனா இரண்டாம் இடம்
கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் பொலநறுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 20 வயதின் கீழ் பெண்கள் அணியினர் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.
இப்போட்டி திங்கள் (09) காலை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரியை எதிர்கொண்ட பொலன்றுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றபொலன்றுவை பென்டிவெவா மத்திய கல்லூரி முதலாம் நிலையிலும் மகாஜனா இரண்டாமிடம் பெற்றது.
முதல் பாதி ஆட்டத்தின்போது இரண்டு அணிகளும் மிகவும் உற்சாகமாக விளையாடிய போதும் கோல்கள் எவற்றையும் பெறவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தின்போது பொலநறுவை பென்டிவெவா அணியினர் இரண்டு கோல்களை அடித்து வெற்றி வாகை சூடினர். இந்நிலையில் தெல்லிப்பழை மஹாஜனா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)