
posted 24th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இணையத்தளம் ஆரம்பம்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் சுகாதார தகவல் முகாமைத்துவப் பிரிவு குறித்த இணையத்தளத்தினை வடிவமைத்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்திருந்தது.
சுகாதார தகவல் முகாமைத்துவப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஐ.எம். முஜீப்பினால் இணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரிவுத் தலைவர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)