ஆசிரியர் தின விழா

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஆசிரியர் தின விழா

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையின் ஆசிரியர் தின விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிமனையின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் கல்முனை வலயக் கல்வி பணிமனையின் கணக்காளர் வை. ஹபிவுல்லா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச். றியாசா, பி. ஜிஹானா, உதவிக் கல்வி பணிப்பாளர்களான திருமதி ஏ. ஏ. மலிக், எல்.எம். சாஜித், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ. மலிக் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பாடசாலையின் ஆசிரியர் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கலை, கலாசார நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றப்பட்டன.

அத்துடன் ஏ.வி.எஸ். சிமாட் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஏ. அஷ்ரப் அலியின் அனுசரணையில் விஷேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின சிறப்பு நினைவுப் பரிசில்கள் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், பாடசாலை நாட்களில் விடுமுறை எடுக்காத முன்மாதிரியான ஆசிரியர், ஆசிரியைகள் சிலர் இதன்போது சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஆசிரியர் தின விழா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)