அம்பாறையில் இயல்பு நிலை ஹர்த்தால் பிசுபிசுப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

அம்பாறையில் இயல்பு நிலை ஹர்த்தால் பிசுபிசுப்பு

வடக்கு, கிழக்கில் வெள்ளிக்கிழமை (20) பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் வழக்கமான இயல்பு நிலையிலேயே காணப்பட்டன.

பல தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலும் ஹர்த்தால் பற்றிய எவ்வித அக்கறையுமின்றி பிசு, பிசுத்த நிலையில் மக்கள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு நீதவான் ரி. சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டித்தும், தமிழ் மக்கள் மீதான அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு தமிழ்த் தேசியக் கட்சிகளால் விடுக்கப்பட்டிருந்தது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாகவும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹஸனலியைச் செயலாளர் நாயகமாகக் கொண்ட ஐக்கிய சமாதானக் கூட்மைப்பு ஹர்த்தாலுக்கு ஆதரவும் தெரிவித்து அழைப்பு விடுத்த நிலையிலும் அம்பாறை மாவட்டத்தின் எந்த முஸ்லிம் பிரதேசத்திலும் ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்கப்படவில்லை.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் முக்கிய மாநகரமான கல்முனையின் முக்கிய பொதுச் சந்தை உட்பட பஸார் பகுதியின் வர்த்தக நிலையங்கள் பலவும் திறந்திருந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆதொழுகையை முன்னிட்டு மூடப்படும் வர்த்தக நிலைங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மாநகரின் தமிழ், முஸ்லிம்களுக்கான பலவர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

அதேபோல் கல்முனை மாநகரிலுள்ள அரச அலுவலகங்கள், வங்கிகள் என்பனவும், பாடசாலைகளும் போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இயங்கின.

ஹர்த்தாலுக்கு கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்காது எனவும், அது பற்றித் தமக்குத் தெரியாது எனவும் முன்கூட்டியே சங்க முக்கியஸ்த்தர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த மாவட்டத்தின் முக்கிய தமிழ்ப் பிரதேசங்களான காரைதீவு, பாண்டிருப்பு மற்றும் முஸ்லிம் பிரதேசங்களான நிந்தவூர், மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி போன்ற பல பிரதேசங்களிலும் ஹர்த்தாலின்றி வழமையான இயல்பு நிலையே காணப்பட்டது.

ஹர்த்தால் தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் வடக்கு உட்பட சில மாவட்டங்களில் முன்னெடுத்த மக்களை விழிப்பூட்டும் செய்றபாடுகளை அம்பாறை மாவட்டத்திலும் முன்னெடுக்க முன்வராமை ஹர்த்தால் தோல்விக்கு இங்கு காரணமென விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறையில் இயல்பு நிலை ஹர்த்தால் பிசுபிசுப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)