
posted 13th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
MP ஆகினார் அலிஸாஹிர் மெலானா
உயர்நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற அங்கத்தவராக கௌரவ செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் நேற்று (2023/10/11) வெளியிடப்பட்டுள்ள 2353/52ஆம் இலக்க விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிணங்க எதிர்வரும் 17 ஆம் திகதி (செவ்வாய்) எம்.பி. யாக சத்தியப்பிரமாணம் எடுக்கவுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதியே பாராளுமன்ற கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)