
posted 21st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
6 சகாப்தங்களைத் தாண்டி நிற்கும் தருமபுரம் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலை
கிளிநொச்சி தருமபுரம் இலக்கம் 1 அரசினர் தமிழ் கலைவன் பாடசாலை 65ஆம் ஆண்டு நடைபயணம் ஒன்று இன்று (21) சனிமுன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாடசாலை 65ஆம் ஆண்டில் கால்பதிக்கும் நாளின் முதல்நாள் நிகழ்வான பாரம்பரிய கலாச்சார உடைகளில், கலை நயங்களை சித்திகரிக்கும் நோக்கில் நடைபவனி இன்றைய தினம் 21.10.2023 இடம்பெற்றது.
தர்மபுரம் வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பிரதானவீதி ஊடாக பாடசாலை மண்டபத்தை சென்று அடைந்தது.
கடந்த 1958.10.28ம் திகதி சம்பிராதாய இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு் இப்பாடசாலையின் முதல் அதிபாராக திரு. ஆறுமுகம் நடராசா கடமையாற்றினார்.
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 65 ஆண்டுகளாக கிளிநொச்சி வடக்கு வலய பாடசாலைகளில் சிறந்த பாடசாலையாக திகழ்கின்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அயல் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)