
posted 27th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
5 ஆவது ஆண்டு நிறைவு விழா
மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் 5ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 28ஆம் தேதி சனிக்கிழமை இடம்பெற உள்ளது.
கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் கல்முனை அலுவலகத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பமாகும் நடைப்பவனியும் அங்குரார்பன நிகழ்வில் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் மாணவர்கள் விரிவுரையாளர்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொள்ள உள்ளனர்
அத்துடன் அன்றைய தினம் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் 5ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புலமைப் பரிசில் வழங்கல் உட்பட சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளதாக மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)