
posted 19th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
விசமிகளால் சேதமாக்கப்பட்ட வீடும், சொத்தும்
முகமாலை பகுதியில் விசமிகளால் வீடு சேதம், சொத்துக்கள் நாசம்...!
முகமாலை பகுதியில் வீடு ஒன்று இனம் தெரியாத விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் 17.10.2023 அன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
கடந்த 45 நாட்களுக்கு முன்னர் வன்முறை சம்பவம் ஒன்ற இடம் பெற்றிருந்ததாகவும் அதில் ஒருவர் மரணம் அடைந்திருந்ததாகவும், அவரது 45ஆம் நாள் நினைவு நேற்றைய முன்தினம் (17) இடம் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுவதுடன் இந்நிலையில் குறித்த வன்முறைச்ச சம்பவங்களுடன் தொடர்புடைய வீடு மீதே 17.10.2023 அன்று தாக்குதல் நடத்தப்பட்டுமிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை கடந்த 45 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
