
posted 24th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வவுனியா வடக்கு கிராம அலுவலர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டம்!
புளியங்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரின் அசமந்தப்போக்கை கண்டித்து வவுனியா வடக்கு கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விடயம் தொடர்பாக ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தினால் வவுனியா வடக்கு பிரதேச செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கையில்;
புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அரசகாணி தொடர்பான வெளிக்கள கடமையின்போது கிராம உதரதியோகத்தர் மா. சுரேந்தர் என்பவர் பொது மக்களால் அச்சுறுத்தப்பட்டு அரச கடமைக்கு இடையூறு விளைவித்து, ஒரு கிராம உத்தியோகத்தர் தமது கடமையை செய்யவிடாது தடுத்தமை தொடர்பில் கடந்த 25.09.2023 மற்றும் 17.10.2023 திகதியுமாக மூன்று முறைப்பாடுகள் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் தொடர்ந்து கடமை புரிவதில் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் எமது சங்கத்துக்கு எழுத்து மூலம் அறியத் தந்துள்ளார்.
இது தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமையால், புளியங்குள பொலிஸ்நிலைய பொலிசாரின் அசமந்தப்போக்கினை கண்டித்து எமது சங்க உறுப்பினர்கள் நேற்று (23) ஒரு நாள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும் கிராம உத்தியோகத்தரான எமது சங்க உறுப்பினர் மா. சுரேந்திரனின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு அரச கடமைக்கு இடையூறு செய்தவர்கள் மற்றும் இடையூறு செய்வோரை கைது செய்யவேண்டும் என குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)