
posted 1st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நீதி கோரி கவனயீர்ப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நீதி இன்று (01-10-2023) கவனயீர்ப்பு போரட்டாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 2474 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சர்வதேச சிறுவர் தினமான இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இறுதி கட்டத்தில் சரணடைந்த சிறுவர்களுக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் குறித்த போராட்டமானது கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)