
posted 4th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வடக்கு, கிழக்கில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள் நேற்று (03) செவ்வாய் பணிப்புறக்கணிப்பு மற்றும் கவனவீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் நேற்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர். இதேநேரம், அவர்கள் தமது நீதிமன்றங்களின் முன்பாக கவனவீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சட்டத்தரணிகளின் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்குச் சமுகளித்த பொதுமக்கள் வீடு திரும்பினர். இதனால், நீதிமன்றங்கள் நேற்று செயலிழந்து வெறிச்சோடிக் காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)