
posted 31st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மீன் இறக்குமதி மீனவ சமூகத்தின் பேரழிவு
சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதனை உடனடியாக நிறுத்துமாறு வடமராட்சி வடக்கு க.தொ.கூ. சங்கங்களின் சாமச பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமராட்சி வடக்கு க.தொ.கூ. சங்கங்களின் சாமசத்தின் பொதுக்கூட்டம் சமாச அலுவலகத்தில் நேற்று (30) திங்கட்கிழமை இடம்பெற்றது.
தடைசெய்யப்பட்ட சட்டவிரோத தொழில் முறைகள் மற்றும் எல்லை தாண்டிய இந்தியமீனவர்களது மீன்பிடி நடவடிக்கை உள்ளிட்ட பிரச்சினைகளால் வடக்கு மாகாண கடல்வளங்கள் அழிக்கப்பட்டு வருவதுடன் மீனவர்களது வாழ்வாதாரமும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதானது மீனவ சமூகத்தை பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்குவதுடன் பேரழிவுக்குள் தள்ளும்விதமாகவே அமைகிறது.
ஆகவே, இலங்கை மீனவ சமூகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றும் வகையில் சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன், மீன்கள் இறக்குமதி செய்வதை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் குறித்த தீர்மானத்தை கடற்றொழில் அமைச்சரிடம் நேரில்கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)