
posted 27th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மின் கட்டண அதிகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கைகளில் தீப்பந்தங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தைக் குறைக்குமாறும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்குமாறும் வலியுறுத்தினர்.
கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி நாடு முழுவதும் 12 இடங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)