
posted 26th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மட்டக்களப்பில் கலந்துரையாடல்
இலங்கையில் தேசிய ஊடககொள்கைத்திட்டமொன்றை வகுத்தல் தொடர்பான தமிழ்மொழி மூல விசேட குழுக் கலந்துரையாடல் ஒன்று 26ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணம் சார்ந்த தமிழ்மொழி மூல இந்தக் கலந்துரையாடல் அமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதி நிதிகள் இந்த விசேட குழுக்கலந்துரையாடலில் பங்கு கொள்ளவுள்ளனர்.
தற்போதய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கிணங்க வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்திட்டத்துடன் இணைந்து, இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும்,
இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கைசட்டமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டு வருகின்றது. இதற்கமைய வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பல கலந்துரையாடல்கள் மூலம், தேசிய ஊடகக் கொள்கையை உருவாக்கும் செயல்முறையில் அனைத்து பங்குதாரர்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதற்கமைய வெகுசன ஊடகஅமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு பல சந்தரப்ப்ங்களில் கூடி விசேட குழுக்கலந்துரையாடல்கள் மூலம், தேசிய ஊடகக் கொள்கையை பங்குதாரர்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதன்படி ஏற்கனவே நான்கு விசேட குழுக்கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதுடன்,
தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் 26ஆம் திகதி (26.10.2023) குறித்த ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனப் பிரதி நிதிகளுடனான விசேட குழுக்கலந்துரையாடல் (மட்டக்களப்பில்) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெகுசன ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி, திட்டமிடல் மற்றம் தகவல்) என்.ஏ.கே.எல். விஜேநாயக்க கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)