
posted 27th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
போதை மாத்திரை விநியோகித்தவர் கைது
பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்து வந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை அடுத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த தேடுதல் நடவடிக்கையின்போது காரைதீவு காவல் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - காரைதீவு பிரதான வீதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேக நபர் அம்பாறை திசாபுர பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்கவர் என்றும், அவரிடமிருந்து, 500 போதை மாத்திரைகளும், அவர் பாவித்த கைத்தொலைபேசி என்பனவும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் காரைதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)