பொன். செல்வராசா காலமானார்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பொன். செல்வராசா காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவருமான பொன். செல்வராசா (வயது 77) மட்டக்களப்பில் நேற்று (13) வெள்ளிக்கிழமை காலமானார்.

உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பினால் அவர் உயிரிழந்தார். அன்னாரின் உடல் மட்டக்களப்பு நகரில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

1946 ஜூலை 25ஆம் திகதி பிறந்த பொன்னம்பலம் செல்வராசா, ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தராவார். இவர், கடந்த 1994ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்.

2001ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதும், பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி 2010 தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு மீண்டும் தெரிவானார். 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை.

பொன். செல்வராசாவின் இறுதிக் கிரியைகள் நாளை (15) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று மாலை 04.00 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயான மின் தகன சாலையில் தகனம் செய்யப்படும் எனக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை முன்னாள் மு. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அகில இலங்கை சமாதான நீதிவான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) இரா.துரைரெத்தினம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

25.07.1946ஆம் ஆண்டு மண்ணில் அவதரித்து 13.10.2023அன்று சமூகத்தில் இருந்து விடைபெற்று விண்ணுலகம் சென்ற பொன். செல்வராசா அவர்களைப் பொறுத்தவரையில் நெருக்கடி மிக்க கால கட்டங்களில் சரியான கொள்கைகளை அமுல்படுத்திய ஜாம்பவான் இன்று எம்முடன் இல்லை. பொன். செல்வராசா சிரேஸ்ட உப தலைவரைப் பொறுத்தவரையில் ஜனநாயகத்திற்கு வேட்டு வைக்கப்பட்டு அனாதைப் பிணங்களாக தெருவோரங்களில் அடையாளம் காட்ட முடியாத மனித அவலங்கள் தலைவிரித்தாடிய போது நெஞ்சை நிமிர்த்தி நேருக்குநேர் எதிரிக்கு எதிராக சவால் விட்டவன் நீ. தமிழர்கள் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ்த் தேசியத்தை பலம் அடைய வைப்பதற்கு வழி சமைத்தவன் நீ. சரியான கொள்கைகளை விதைத்தவன் நீ. அவ் விதையை அறுவடையாக்குவோம்.

பொன். செல்வராசா காலமானார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)