புறக்கோட்டையில் பெரும் தீ விபத்து! ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

புறக்கோட்டையில் பெரும் தீ விபத்து! ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடம்

கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் நேற்று (27) வெள்ளி காலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறின.

கொழும்பு புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள 8 மாடி கட்டடமொன்றில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காலை 9.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து 7 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
குறித்த தீ விபத்தில் 15 பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தீ விபத்தில் பல வர்த்தக நிலையங்கள் சேததடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் காலை சமய வழிபாட்டின் போது கற்பூரத்தின் ஊடாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

புறக்கோட்டையில் பெரும் தீ விபத்து! ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)