
posted 30th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பண்ணைக் கடலுக்குள் பாய்ந்த ஆட்டோ
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த ஓட்டோ ஒன்ற வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்தது.
நேற்று (29) ஞாயிறு மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது.
முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட ஐவர் பயணித்த நிலையில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் இதனால் காயமடைந்துள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)