பணிப்பாளராக டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் கடமையேற்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பணிப்பாளராக டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் கடமையேற்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் கடமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் வரலாற்றில் இவரே முதலாவது பெண் பணிப்பாளர் ஆவார்,

மருத்துவ துறையில் 35 வருட சேவைக் காலத்தை கொண்ட இவர் சாய்ந்தமருதின் முதலாவது பெண் எம்பிபிஎஸ் மருத்துவ கலாநிதியும், மருத்துவ நிர்வாகத்துறையில் முதலாவது முஸ்லிம் பெண் நிர்வாக உத்தியோகத்தரும் ஆவார்.

சாய்ந்தமருது முன்னாள் மரண விசாரணை அதிகாரி மர்ஹும் ராசிக் காரியப்பரின் புதல்வியும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னாள் பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான ஓய்வுபெற்ற வைத்தியர் டாக்டர் ஏ இஸ்ஸடீன் அவர்களின் மனைவியும் ஆவார்.

சாய்ந்தமருது வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றி நிறுவனம் சார்பான போட்டிகளில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணிப்பாளராக டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் கடமையேற்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)