நீதி தேவதைக்கு முன்பாக மண்டியிட்ட போராட்டக்காரர்கள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நீதி தேவதைக்கு முன்பாக மண்டியிட்ட போராட்டக்காரர்கள்

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிகள் நீதி தேவதையிடம் நேற்று (04) மண்டியிட்டு, நீதிபதிக்கு நீதி கோரினர்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நேற்று (04) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது கொக்குவில் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டோர், நீதி தேவதையின் உருவச் சிலைக்கு கறுப்புத் துணி கட்டி, நீதி தேவதையின் கையில் உள்ள தராசு ஒரு பக்கமாக தாழ்ந்து இருக்கக் கூடியவாறு, நீதி தேவதையின் உருவ சிலையை காட்சிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

பின்னர் சட்டத்தரணிகள், அரசியல் வாதிகள் எனப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் நீதி தேவதையின் உருவ சிலைக்கு முன் மண்டியிட்டு, நீதி கோரினர்.

நீதி தேவதைக்கு முன்பாக மண்டியிட்ட போராட்டக்காரர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)