
posted 19th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நிரந்தர நியமனம் கோரி போராட்டம்
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி புதன்கிழமை (18) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களையும் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் கிழக்கு மாகாண சபையின் தலைமைச் செயலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடி, அங்கிருந்து ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்று, அங்கு நீண்ட நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இதில் கல்முனை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று மாநகர சபைகளில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)