
posted 14th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நிந்தவூரில் இரத்ததான முகாம்
நிந்தவூர் ஐக்கிய சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று வெற்றிகரமாக இடம்பெற்றது.
நிந்தவூர்ப்பகுதியில் பல்வேறு சமூக சேவைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பு (United Social Service Organization) மூன்றாவது தடவையாக இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
அமைப்பின் தலைவரும், சமூக சேவையாளருமான ஏ.ஐ.எம். சிராஜ் தலைமையில், நிந்தவூர் அல் - மஸ்லம் வித்திலாயத்தில் இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது
கல்முனை அஷ்ரப் ஞாபகாரத்த வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கென குறித்த தானம் செய்யப்பட்ட இரத்தம் பெறப்பட்டதுடன், பெருந்தொகையான ஆண்களும், பெண்களும் குறிப்பாக இளைஞர்களும் இரத்ததானம் வழங்குவதில் பங்குகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)