நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு (ஹமாஸ்) இடையில் இடம்பெற்றுவரும் மோதலில், பலஸ்தீன மக்கள் மீதான அடாவடி, அத்துமீறலைக் கண்டித்தும் பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கையின் முக்கிய முஸ்லிம் பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

நேற்று (13) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பெருந்தொகையான முஸ்லிம்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டதுடன், இஸ்ரேல் அரசுக்கு எதிரான கண்டனக் கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டு, இஸ்ரேலின் தேசியக் கொடியும் எரிக்கப்பட்டன.

கொழும்பில் தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு அருகில் நேற்று ஜும்ஆ தொழுகையின் பின் இடம்பெற்ற மேற்படி இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீன், முன்னாள் நாடாளுமன் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்த்தர்களான எம்.;ஏ.எம். தாஹிர், சட்டத்தரணி அன்சில், பகத் உட்பட பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை புத்தளம் உட்பட கிழக்கின் சில பிரதேசங்களிலும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற அதேவேளை. பலஸ்தீன மக்களுக்காக விசேட பிரார்த்தனைகளிலும் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டனர். மேலும் அடுத்துவரும் பத்து நாட்களுக்கு, பலஸ்தீன மக்களுக்காக தொழுகையிலும் குனூத், அந் நாஸிலாவை ஓதுமாறும் கோரப்பட்டுள்ளனர்.

நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)