
posted 23rd October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நாக விகாரையைப் பார்வையிட்ட பழங்குடியினர்
யாழ்ப்பாணம் வந்த பழங்குடியினர் நேற்றைய தினம் நயினாதீவு நாக விகாரையை பார்வையிட்டனர்.
மகியங்கனையில் வசித்துவரும் பழங்குடியினர் யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் சனிவருகை தந்தனர்.
இவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர், கோட்டை உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் இந்தக் குழுவினர் நயினாதீவு நாக விகாரைக்கு சென்றனர். அத்துடன், அவர்கள் விகாரதிபதியையும் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)