
posted 8th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தொடரும் சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு
முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் கடந்த 02 ஆம் திகதி ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் நேற்று முன்தினம் (06) வெள்ளி ஐந்தாவது நாளாகத் தொடர்ந்தது.
நீதித்துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி தெரிவித்திருந்தார்.
அதற்கமைய கடந்த 02 ஆம் திகதி ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றது.
முல்லைத்தீவு நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறுகின்ற மாங்குளம் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கும் சட்டத்தரணிகளின் யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)