துண்டாடப்படவுள்ள மின்சார சபை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

துண்டாடப்படவுள்ள மின்சார சபை

இலங்கை மின்சார தொழிற்சங்கத்தின் பாரிய தொழிற்சங்க மாநாடு ஒன்று எதிர்வரும் 20 ஆந் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கின்றது. உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றிணைத்து இந்த மாநாடு மஹரகம இளைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை மின்சார சபையை 14 நிறுவனங்களுக்கு பிரித்து விற்பனை செய்ய எடுக்கப்படும் அரச நடவடிக்கை, பதவி உயர்வுகள் வழங்கப்படாமை, ஊக்குவிப்பு ஊதியம் வழங்கப்படாமை, சுகயீன ஊதியம் தவிர்க்கப்பட்டமை, ஊழியர் சேமலாப நிதி கொள்கை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆட்சேபித்தும் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இதேவேளை நாட்டில் வாழ்க்கைச் செலவு உயர்வை சமாளிக்க முடியாது அரச ஊழியர்கள் மற்றும் தனியார், தோட்ட, ஓய்வூதியர்கள் பெரும் கஷ்ட நிலமைக்கு உள்ளாகியுள்ளதால், குறைந்த பட்சமாக 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுகான அரசின் வரவு செலவுத்திட்டத்தில் குறித்த 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றனது.

இவ்வாறு சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்திய போராட்டங்கள் இந்த வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி மக்களை விழிப்பூட்டும் சுவரொட்டிகளை நாடளாவிய ரீதியில் ஒட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

துண்டாடப்படவுள்ள மின்சார சபை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)