
posted 28th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
திவுலுப்பொத்தானையிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்றுவதற்கு முயற்சி
மட்டக்களப்பின் திவுலுப்பொத்தானையிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அம்பிட்டியே சுமணரத்ன தேரர், அந்த மக்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ள நான்குபக்க கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கை காரணமாக விக்கிரமசிங்க - ராஜபக்ச அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திவுலுபொத்தானையிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள மக்களை அச்சுறுத்துவதற்கு அனுமதித்துள்ளது என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைமைத்துவத்தின் சார்பில் மகாவலி அதிகாரிகளும் பொலிஸாரும் கிழக்கு மாகாணத்திலிருந்து சிங்களவர்களை வெளியேற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏனையவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர் எனவும் மனித உரிமை குழுவிற்கான கடிதத்தில் தேரர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கிழக்கு மாகாண ஆளுநரும் முக்கியமானவர்கள் என தேரர் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)