
posted 19th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தமிழ் மீனவர்கள் என்பதாலேயே கடற் படையின நடவடிக்கை எடுக்கவில்லை
பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள் என்பதாலயே கடற்படை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பததுவதில்லை என வடமராட்சி மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை எல்லை தாண்டும் மீனவர்களை கட்டுப்படுத்த அரசுகள் தவறுவதால் நாம் உண்டியலில் பணம் சேர்த்து இந்திய மீனவர்களுடன் பேசி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்துமாறு கூற இருப்பதாகவும் வடமராட்சி மீனவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தியா செல்வதற்க்கு தம்மிடம் பணம் இல்லை என்றும் இதனால் அதற்கான பணத்தினை தமது அங்கத்தவர்களிடம் சேகரித்து அதில் சேருகின்ற பணத்தை வைத்தே தாம் இந்தியா செல்லவுள்ளதாகவும் தெரிவித்த மீனவர்கள் நிதி சேகரிப்பு உண்டியல் மூலம் இன்றைய தினம் நிதி சேகரிப்பதையும் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விடயங்கள் தொடர்பில் முனை கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் அவர்கள் நடத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதில் வடமராட்சி வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் 13 பேர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது எல்லை தாண்டி மீன் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களால் தமது தொழில்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும், சொத்துக்கள் இழக்கப்படுவதாகவும் தெரிவித்த்துடுடன் இது தொடர்பில் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அமைச்சர், கடற்படை உயர் அதிகாரிகளுடனும் பேசியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் இதனாலேயே தாம் இந்தியா சென்று மீனவர் பிரதிநிதிகளுடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)