
posted 26th October 2023
துயர் பகிர்வு
துயர் பகிர்வு
சேவை நலன் பாராட்டு
அஞ்சல் அலுவலகத்தில் மிகநீண்ட காலமாக பணியாற்றி ஓய்வு பெற்ற இரு உத்தியோகத்தர்களின் சேவை நலன் பாராட்டும் வைபவம் கல்முனை பிரதம தபாலகத்தில் கல்முனை பிரதம அஞ்சல் அதிபர் யூ.எல்.எம். பைஸர் தலைமையில் நடைபெற்றது.
கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக அஞ்சல் சேவையில் மதிதயன் மற்றும் நாகராஜா ஆகியோர் செயற்பட்டதுடன் அவர்கள் நிகழ்வில் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இவ்விருவரும் தத்தமது சேவைக்கால அனுபவங்களை நிகழ்வில் உரைகளாக முன்வைத்தனர். இவர்கள் இருவரும் 30 வருடங்களுக்கு மேல் சேவையாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)