
posted 12th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
செயலி வழி சேவையா? நமது வாழ்க்கையா? போரட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள்
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர் புதன் கிழமையன்று (11).
யாழ்ப்பாணத்தில் அண்மையில் அறிமுகமான செயலி வழி முச்சக்கர வண்டி சேவையை கண்டித்தும், இதனை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரியுமே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் நகரில் முடிவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற ஓட்டோ சாரதிகள் தத்தமது உள்ளக் கிடக்கைகளை கோஷங்களை சுலோகங்களால் வெளிக்காட்டினர்.
- “அரச அதிகாரிகளே எமக்கான நீதியை பெற்றுத் தாரங்கள் - நாங்கள் கோருவது எமது வாழ்வாதாரமே”
- “40 வருடமாக எமது சேவையைப் புறந்தள்ளிய செயலி மூலம் இயங்கும் கட்டண மானியை வெளியேற்று”
- “வெளியேறு, வெளியேறு செயலி கட்டண மானியே உடன் வெளியேறு” >“அனுமதியின்றி செயல்படும் மீற்றரால் 2 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியா”
போன்ற சுலோகங்களை அவர்களது வாழ்க்கையினையே ஓடவைக்கும் தத்தமது ஆட்டோக்களைத் தாங்க வைத்து தங்களது ஆதங்கங்களை வெளிக் கொணர்ந்தனர்.
செயலி வழி மூலமான முச்சக்கர வண்டி சேவையால் நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயல்படும் தாங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)