
posted 24th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
காரைதீவில் இந்து கலாசார திணைக்களத்தின் நவராத்திரி விழா
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய நவராத்திரி விழா காரைதீவில் நடைபெற்று வருகிறது.
இந்து சமய கலாச்சார திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும், காரைதீவு விபுலானந்த பணி மன்றமும் இணைந்து மூன்றாவது வருடமாக தொடர்ச்சியாக நடத்துகின்ற நவராத்திரி விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) மாலை எட்டாவது நாளாக மணிமண்டபத்தில் நடைபெற்றது .
அங்கு பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன் கலந்து சிறப்பித்தார்.
விபுலானந்தா மணி மண்டபஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி. சகாதேவராஜா கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார் .
மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் ஏற்பாட்டில் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
கதாபிரசங்கி நாகராஜா சனாதனன் பணி மன்றப் பொருளாளர் வி. குலேந்திரன் மற்றும் அறநெறி மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
மஞ்சுலேகா நர்த்தனாலயம் மற்றும் விஸ்ணுஅறநெறி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட சரஸ்வதி படம் பொறித்த திருவுருவ படமும் பிரதம அதிதிக்கும் ஆசிரியைக்கும் வழங்கப்பட்டது. கடந்த ஒன்பது தினங்களிலும் இவ்வாறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று கலைவகுப்புகளின் வித்தியாரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)