
posted 2nd October 2023
துயர்பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
காணாமல் ஆக்கப்பட்ட சிறார்க்கு நீதி கோரி யாழிலும் போராட்டம்!
சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) ஞாயிறு இறுதிப் போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி இன்று யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு அண்மையாக நேற்று காலை இந்தப் போராட்டம் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் யாழ். மாவட்டத்தினரின் ஏற்பாட்டில் நடந்த இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட, படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை சர்வதேசம் மீட்டுத் தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். அத்துடன், எமது பிள்ளைகளை காணவில்லை என கடந்த பத்து வருடத்திற்கு மேலாக நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், இதுவரையில் இலங்கை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் தாமதிக்காது சர்வதேசம் காத்திரமான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)